ரூ.300 கோடி பட்ஜெட்டில் ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்த படம்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (18:06 IST)
ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடிப்பில் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூபாய் ஆயிரம் கோடி வசூல் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் ஜூனியர் என்டிஆரின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் கொரடலா சிவா இயக்க இருப்பதாகவும் இந்த படம் ரூபாய் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
அதிரடி ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாகும் என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்