அந்த படத்தை என்ன ஆனாலும் தியேட்டரில்தான் ரிலீஸ் செய்வேன்… அடம்பிடிக்கும் தயாரிப்பாளர்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (10:22 IST)
கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள திரைப்படம் ஜோஸ்வா. இந்த படத்தை வருணின் மாமா ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ’யோகன் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது. முழுக்க முழுக்க அமெரிக்காவில் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் உருவாக்க திட்டமிட்டிருந்த இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் சில நாட்கள் நடைபெற்ற நிலையில் திடீரென இந்த படம் டிராப் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இதே கதையை வருண்என்ற அறிமுக நடிகரின் நடிப்பில் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற பெயரில் கௌதம் மேனன் தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தினை ஓடிடியில் ரிலீஸ் செய்ய சில நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு வந்த போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என்ன ஆனாலும் சரி இந்த படத்தை திரையரங்கில்தான் ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்து விட்டாராம். ஏனென்றால் இந்த படம் வருணுக்கு ஒரு அடையாளமாக அமையும் என எதிர்பார்க்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்