இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கத்தில் அதர்வா… அடுத்த பட அப்டேட்!
புதன், 23 நவம்பர் 2022 (15:55 IST)
நடிகர் அதர்வா அடுத்து இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமானவர் அதர்வா. இவர் நடிப்பில் வெளியான பரதேசி மற்றும் ஈட்டி உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. ஆனாலும் ஒரு மிகப்பெரிய ஹிட் படத்துக்காக அவர் இன்னமும் காத்திருக்கிறார்.
இந்நிலையில் இப்போது பட்டத்து அரசன் ரிலீஸுக்கு அடுத்து, இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.