அதர்வா நடிக்கும் ‘பட்டத்து அரசன்’: சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி

செவ்வாய், 15 நவம்பர் 2022 (17:04 IST)
அதர்வா நடிக்கும் ‘பட்டத்து அரசன்’: சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி
நடிகர் அதர்வா நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று பட்டத்து அரசன் ன்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் தகவல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நடிகர் அதர்வா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் பட்டத்து அரசன். களவாணி என்ற மாபெரும் சூப்பர் ஹிட் படத்தை எடுத்த சற்குணம் தற்போது பட்டத்து அரசன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் 
 
இந்த படத்தின் அதர்வா மற்றும் ராஜ்கிரண் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படம் நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்