பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் ஜீவாவின் பிளாக் திரைப்படம்…!

vinoth
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (10:56 IST)
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரித்து நடிகர் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியானது பிளாக் திரைப்படம். இது coherence என்ற திரைப்படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது.

இந்த படம் வெளியாகும் போது ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் ஆனதால் பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு இல்லை. அது மட்டும் இல்லாமல் இந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு, முதல் நாள் முதல் காட்சி ரத்தானது.

இப்படி பல தடைகளுக்குப் பின்னர் ரிலீஸான இந்த திரைப்படம் இப்போது நேர்மறையான விமர்சனங்களைப் பெற தொடங்கியுள்ளது. வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களைப் பெறுவதால் பிளாக் படத்துக்கு செல்ல ரசிகர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். சிறு பட்ஜெட் படம் என்பதால் அடுத்த வாரத்தில் இந்த படம் பிக்கப் ஆனால் லாபத்தைப் பார்க்கும் என சொலல்ப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்