மீண்டும் கேங்ஸ்டராக ஜெயம் ரவி… பூலோகம் கூட்டணியின் அடுத்த படைப்பு!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (18:46 IST)
நடிகர் ஜெயம் ரவி இப்போது பூலோகம் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் புதுப்படத்தில் நடிக்க உள்ளனர்.

ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னை குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்க ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். ஆனால் இயக்குனருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீண்டகாலமாக முடங்கிக் கிடந்தது.

அதன் பின்னர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் அந்த இயக்குனருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது  ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ஆதிபகவன் படத்துக்கு பின்னர் ஜெயம் ரவி இப்போது ஹேங்ஸ்டராக நடிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்