ஜெயம் ரவி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதற்கு என்ன காரணம்?

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (17:54 IST)
மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்த ஜெயம் ரவியின் ‘வனமகன்’, மே 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


 
 
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘வனமகன்’. அவருக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். டார்ஜானைப் போல காட்டில் பிறந்து, வாழ்ந்தவராக நடிக்கிறார் ஜெயம் ரவி.
 
இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து, மே மாதம் 12ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால், எடிட்டிங் இன்னும் முடியவில்லை. எனவே, சென்சாருக்கு அனுப்ப நேரம் வேண்டும் என்பதால், மே 19ஆம் தேதிக்கு படத்தை தள்ளிவைத்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்