தமிழ் ராக்கர்ஸை நெருங்கினாரா தயாரிப்பாளர்?

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (17:43 IST)
எந்தப் படமாக இருந்தாலும், ரிலீஸான அன்றே ஆன்லைனிலும் வெளியிட்டு விடுகிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். இதனால், பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். இதனால், ‘பதவிக்கு வந்த ரெண்டே மாதத்தில் உன்னைத்  தூக்குகிறேன் பார்’ என்று சவால் விட்டார் ‘பச்சை’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கிங். 

 
பதவிக்கு வந்துவிட்ட அவர், சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக 24 மணி நேரமும் உழைக்கிறாராம். யார் யார் மூலமாகவோ முயற்சித்துப் பார்த்தும், தமிழ் ராக்கர்ஸை நெருங்கக் கூட முடியவில்லையாம். பதவிக்கு வந்து ஒரு மாதம்  வேறு ஆகப் போகிறது. எனவே, ‘தமிழ் ராக்கர்ஸை நெருங்கி விட்டேன். அவனுடன் போனில் பேசிவிட்டேன்’ என்று ட்விட்டரில் புருடா விட்டுள்ளாராம் தயாரிப்பாளர். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவாரா தயாரிப்பாளர்?
அடுத்த கட்டுரையில்