20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

vinoth
சனி, 21 செப்டம்பர் 2024 (09:08 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்னர்  ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளதாக ரவி தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. ஆனால் தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆர்த்தி குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதியினரின் இந்த பிரிவுக்கு ஆர்த்திதான் காரணம் என்றும், அவர் ஜெயம் ரவி மேல் சந்தேகப்பட்டுக் கொண்டே இருந்து டார்ச்சர் செய்ததால்தால் இந்த முடிவை எடுத்தார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஜெயம் ரவி கோவாவைச் சேர்ந்த பாடகி ஒருவரோடு இப்போது டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் இந்த நெருக்கம்தான் விவாகரத்துக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெயம் ரவி “கடந்த சில ஆண்டுகளாகவே விவாகரத்து முடிவில் இருந்தேன். அவருக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியிருந்தேன். அவருடைய அப்பா என்னிடம் பேசினார். இருந்தும் தனக்கு தெரியாமல் எடுத்த முடிவு என அவர் சொல்வது அதிர்ச்சியாக உள்ளது. என் மகன்கள் இப்போது என்னுடன்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி சொன்னால் புரியுமோ அப்படி சொல்லியுள்ளேன். எல்லாக் குழந்தைகளையும் போலவே அவர்களும் இருவரையும் சேர்ந்து வாழ சொல்கிறார்கள்.

இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் நான் எந்த கிசுகிசுவிலும் சிக்கியதில்லை. ஆனால் இப்போது என்னை வேறொரு பெண்ணுடன் இணைத்து செய்திகள் வெளியாவது தவறானது. இன்னொரு பெண்ணை இந்த விஷயத்தில் தொடர்பு படுத்துவது தேவையில்லாதது. அது குறித்து பேச வேண்டாம் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்