தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்தனுஷ். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இந்த நட்சத்திர தம்பதியினர் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். இதையடுத்து குழந்தைகள் தாய் ஐஸ்வர்யாவோடு வசித்து வருகின்றனர்