ஜெயம் ரவியின் சைரன் படத்தின் ரிலீஸில் நடந்த திடீர் மாற்றம்!

vinoth
திங்கள், 15 ஜனவரி 2024 (08:04 IST)
ஜெயம் ரவி இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு சைரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். சைரன் படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையி இந்த படத்தின் டீசர் சமீபத்தில்  வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது.

இந்நிலையில் இந்த படம் இப்போது இந்த படம் தயாராகி வந்துள்ளது. இந்நிலையில் சைரன் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 26 ஆம் தேதி ஜி தமிழில் இந்த படம் வெளியாகலாம் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படம் நேரடியாக திரையரங்குகளில் பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனவும், அதன் பிறகே ஜி தமிழ் ஓடிடியில் இந்த படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்