ஜெயம் ரவி& கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் புதுப்படம்… தயாரிப்பாளர் இவர்தான்!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (16:29 IST)
ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. அவர் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் வெற்றியால் ‘ஜெயம்’ ரவி என்றே அழைக்கப்பட்டு வருகிறார். அவரின் அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்த ஜெயம் ரவி பேராண்மை, தனி ஒருவன் பாராட்டத்தக்க படங்களை கொடுத்துள்ளார்.

கடைசியாக பூமி திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து தற்போது அவர் அகிலன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். அகமது இயக்கும் படம், இயக்குனர் எம் ராஜேஷ் கூட்டணியில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார்.

இதையடுத்து ஜெயம் ரவி நடிக்க உள்ள புதுப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் தயாரிகக் உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு சிறையை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்