அவதார் 2 படத்தில் டைட்டானிக் நடிகை… வெளியான அட்டகாசமான லுக்!

வெள்ளி, 1 ஜூலை 2022 (15:44 IST)
அவதார் 2 திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் 160 மொழிகளில் ரிலீஸாகிறது.

உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியானது. இருபத்தி நான்கு கோடி டாலர்  பட்ஜெட்டில் உருவான இந்த படம் 284 கோடி டாலர் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சுமார் 160 மொழிகளில் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தின் தலைப்பு பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது ‘Avatar 2: the way of water’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து சமீபத்தில் அவதார் 2 படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. முழுக்க முழுக்க விஷ்வல் ட்ரீட்டாக அமைந்துள்ளன டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள். இந்த டீசர் படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளன.

இந்நிலையில் இப்போது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட்டின் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த கதாபாத்திர தோற்றம் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்