போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

vinoth
ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (07:16 IST)
தென்னிந்தியாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் ஜானி மாஸ்டர். இவர் நடனம் வடிவமைத்த புட்ட பொம்மா, அரபிக்குத்து மற்றும் ரஞ்சிதமே போன்ற பாடல்கள் வைரல் ஹிட்டாகின. அதுமட்டுமில்லாமல் அந்த பாடல்களின் ரீல்ஸ்களால் சமூகவலைதளங்கள் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் இப்போது அவரே ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பெண் அவர் மேல் பாலியல் புகார் அளித்தார். ஜானியிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றிய போது தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாக அளித்தக் குற்றச்சாட்டை அடுத்து சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் தன் மீதானக் குற்றச்சாட்டை மறுத்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்றிருந்த ‘மேகம் கருக்காதோ பெண்ணே பெண்ணே” என்ற பாடலுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்படுவதால் அந்த விருது ரத்து செய்யப்படுவதாக தேசிய விருதுகள் கமிட்டி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்