அந்த பெண்தான் என்னை டார்ச்சர் செய்தார்… குற்றச்சாட்டுகளை மறுத்த ஜானி மாஸ்டர்!

vinoth

சனி, 28 செப்டம்பர் 2024 (09:48 IST)
தென்னிந்தியாவின் தற்போதைய மோஸ்ட் வாண்டட் நடன இயக்குனர்களில் ஒருவர் ஜானி மாஸ்டர். இவர் நடனம் வடிவமைத்த புட்ட பொம்மா மற்றும் அரபிக்குத்து மற்றும் ரஞ்சிதமே போன்ற பாடல்கள் வைரல் ஹிட்டாகின. அதுமட்டுமில்லாமல் அந்த பாடல்களின் ரீல்ஸ்களால் சமூகவலைதளங்கள் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் இப்போது அவரே ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பெண் அவர் மேல் பாலியல் புகார் அளித்தார். ஜானியிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றிய போது தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாக அளித்தக் குற்றச்சாட்டை அடுத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தில் அந்த பெண் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனக் கூறியுள்ளார். அதில் “அந்த பெண்ணை நான் ஒரு நிகழ்ச்சியில்தான் பார்த்தேன். அவரிடம் திறமை இருந்ததால், என்னுடைய உதவி நடன இயக்குனராக சேர்த்துக்கொண்டேன். ஆனால் அவர் ஒரு கட்டத்தில் அவர் என்னைத் திருமணம் செய்துகொள்ள சொல்லி கட்டாயப்படுத்தினார். என் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் யாரோ சதி செய்து என்னை சிக்கவைத்துள்ளார்கள்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்