ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், ஜெயிலர் படத்தில் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இண்டர் நேசனல் நிறுவனம் கைப்பற்றியது.
இந்த நிலையில், ஜெயிலர் பட அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
எனவே சன்பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், நெல்சன், அவரது அலுவலகம் சென்று அவரிடம் முதல் சிங்கில் பாடல் கேட்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், நடிகை தமன்னா நடனமாடியுள்ள #Kaavaalaa என்ற பாடலின் சில நொடிகள் ஒலிக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது. ம
இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இந்த புரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இப்பாடலுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்பாடல் வரும் 6 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.