சந்திரமுகி-2 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் படம் சந்திரமுகி 2. இப்படத்தில் இவருடன் இணைந்து, வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைத்து வருகிறார்.
முதல் பாகத்தில் சந்திரமுகி வேடத்தில் ஜோதிகா நடித்திருந்த கதாப்பாத்திரத்தில் இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸுக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், சந்திரமுகி -2 படத்தில் வேட்டையன் ராஜாவாக மாறி நடிகர் ராகவா லாரன்ஸ் தன் டப்பிங் பணியைத் தொடங்கியுள்ளார் என்று லைக்கா நிறுவனம் அறிவித்து, இதுகுறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.
இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்படி, சந்திரமுகி 2 படி வரும் கணேஷ் சதுர்த்தி( செப்டம்பர் 19) அன்று இப்படம் தமிழ், கன்னடம், இந்தியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Vettaiyan Raja Paraak Paraak Paraak! Raghava Lawrence transforms as vettaiyan and starts dubbing for Chandramukhi 2 from today