ஆக்ஸிஜன் சிலிண்டரோடு சிவன்… எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்புக் கேட்ட இயக்குனர்!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (09:51 IST)

ஜகா என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

ஆடுகளம் முருகதாஸ் நடித்திருக்கும் ஜகா படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் சிவன் வேடத்தில் இருக்கும் முருகதாஸ் ஆக்ஸிஹன் மாஸ்க் அணிந்திருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்படி உள்ளதாக எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதையடுத்து அந்த படத்தின் இயக்குனர் ஆர் விஜயமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘ஜகா முதல் பார்வை பலரின் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. எங்கள் நிறுவனத்தின் பெயரே ஓம் டாக்கீஸ். பாபநாசம் சிவன் கோயிலில் பூஜை போட்டுவிட்டுதான் படப்பிடிப்பைத் தொடங்கினோம். அப்படி இருக்கும்போது சிவபெருமானை அவமதிப்போமா? கோவிட் 19 விழிப்புணர்வு நோக்கத்தில் வைக்கப்பட்ட காட்சிதான் அது. கொரோனா வழிகாட்டு முறைகளை மீறக்கூடாது என கடவுளே சொல்வது போன்றுதான் அந்த முதல் பார்வை.

மனிதர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைவிட கடவுள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் அந்த முதல் பார்வை வடிவமைக்கப்பட்டது. படத்தில் எந்த இடத்திலும் கடவுள் அனுமதிக்கப்படவில்லை. அதுபோன்ற எண்ணம் ஒருபோதும் எங்களுக்கு ஏற்படாது. மலிவான விளம்பரம் போடும் விருப்பம் எங்கள் குழுவினருக்குத் துளியும் இல்லை. இருப்பினும் எந்தவித உள்நோக்கமும் இல்லாது செயல்பட்ட எங்களின் இத்தகைய செயல் பலரின் மனது புண்படுத்தியது அறிந்து வருந்துகிறேன். அதற்காக மன்னிப்பு கோருவதோடு கொரோனா இல்லாத உலகம் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்