வெற்றிமாறன் –சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த வாடிவாசல் திரைப்படம் தற்காலிகமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்கும் வடசென்னை படத்துக்கும் தொடர்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த படமும் அடுத்தகட்டம் நோக்கி நகர்வதிலும் தாமதம் ஏற்பட்டது. ஏனென்றால் சிம்பு கேட்கும் சம்பளத்தால் தாணு அந்த படத்தினைத் தயாரிக்க விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து நான்காம் தேதி அந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த வீடியோவுக்கான சென்சார் பணிகள் நடைபெற்று நேரடியாக திரையரங்கிலும் வெளியாகவுள்ளதால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு அரசன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கையில் ரத்தக்கறைப் படிந்த அரிவாளோடு சிலம்பரசன் நிற்பது போன்ற போஸ்டர் படம் 80 களில் நடப்பதைப் போன்ற கதை என்பதை உறுதி செய்துள்ளது.