ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறாரா சிம்பு?

vinoth

புதன், 8 அக்டோபர் 2025 (10:23 IST)
வெற்றிமாறன் –சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த ‘வாடிவாசல்’ திரைப்படம் தற்காலிகமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்கும் ‘வடசென்னை ‘ படத்துக்கும் தொடர்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நேற்றுக் காலை இந்த படத்தின் முதல் லுக் போஸ்டருடன் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்துக்கு ‘அரசன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  படத்தில் தயாரிப்பாளர் தாணு, நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குனர் வெற்றி மாறன் ஆகியோர் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் எதுவும் இல்லை.

இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. அதன் பிறகு இடைவெளி விடப்படவுள்ள நிலையில் சிம்பு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி ஒரே நேரத்தில் சிம்பு இரண்டு படங்களிலும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்