'பைசன்' படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது. பொதுவாக, இந்த பெரிய நீளம், தற்போதைய சினிமா டிரெண்டில் பல படங்களின் வெற்றிக்கு சவாலாகவே அமைந்துள்ளது. படத்தின் இந்த நீளம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
படம் தணிக்கைக்காகச் சென்றபோது, படத்தில் அதிக கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. படத்தின் கிராமிய சூழலைச் சித்தரிக்கும் விதமாக, வட்டார வழக்கு என்ற பெயரில் இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தணிக்கை துறையில் இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மலேசியாவில் 'பைசன்' படத்தை வெளியிடும் விநியோகஸ்தர், இந்த வசனங்களால் தணிக்கைச் சான்றிதழில் சிக்கல் வரலாம் என அஞ்சியுள்ளார். குறிப்பாக, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்கக் கூடாது என்ற சான்றிதழ் கிடைத்தால், வசூலை பாதிக்கும் என்று அவர் கருதியுள்ளார்.
இதன் காரணமாக, அவர் முன்னெச்சரிக்கையாக ஒரு முடிவை எடுத்துள்ளார். படத்தில் ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்படும் அனைத்து வசனங்களுக்கும் 'மியூட்' போட்டு, படத்தை திரையிட முடிவெடுத்துள்ளாராம். இதன் மூலம், 18 வயதுக்கு உட்பட்டவர்களும் பார்க்கும் வகையில் தணிக்கை சான்றிதழை பெற அவர் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.