வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக இளையராஜா… வீடியோவில் வாழ்த்திய இசைஞானி!

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (16:28 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தில் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்க உள்ளனர்.

மாநாடு வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இதையடுத்து அவர் இயக்கிய அடல்ட் காமெடி படமான மன்மத லீலை ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கவனிக்கப்பட்டது. அதையடுத்து நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை அவர் இயக்க உள்ளார். இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் படத்துக்கு ஒளிப்பதிவாளராக SR கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  இன்று தற்போது இந்த படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் உப்பேன்னா படம் மூலமாக கவனம் பெற்றவர். சூர்யா பாலா படத்தின் கதாநாயகியும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து படத்துக்கு இசையமைப்பாளராக இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் பணியாற்ற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து இளையராஜா வீடியோவில் தெலுங்கில் பேசி வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்