பறவைகள் வளர்ப்பதால் இத்தனை பாதிப்பா?

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (16:07 IST)
நடிகை மீனாவின்  கணவருக்கு புறாவின் எச்சத்தால் ஏற்படும் சுவாசத் தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு இரண்டு நுரையீரல்களும் பாதிக்கப்பட்டு, வேறு ஒருவரிடம் இருந்து பெறுவதாக மருத்துவமனை திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்குத் தாமதம் ஆனதால், இப்டியே அவர் குணமாகலாம் என  நினைத்தனர். துரதிஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முந்தினம் இரவு காலமான நிலையில் இன்று அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

நடிகை மீனாவின் கணவர் வித்தியாசகரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், புறாக்கள் வளர்ப்பதும், புறாக்கள் வளர்க்கும் இடங்களில் இருப்பதும் எத்தனை ஆபத்து என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி,  நாம் சுவாசிக்கும்போது, நுண்ணுயிர்கள் மற்றும் பூஞ்சைகள் சுவாசக் குழாய் மூலம் நுரையீரலுக்குள் சென்று  நுரையீரலின் சுறுங்கி விரியும் தன்மையை குறைக்கும். சுவாசிக்க தேவையான ஆக்சிஜன் உள்ளே சென்றாலும் நுரையீரலால் அதை கிரகிக்க முடியாது.  சில ஆண்டுகளி நுரையீரல் செயலிழக்கும், இந்தப் பாதிப்பு  இருக்கும்போது, முதலிலலேயே மருத்துவரை அணுகினால் சிகிச்சையால் தீர்வு பெறலாம், இல்லையென்றால், நுரையீரல் மாற்றுவதுதான் ஒரே தீர்வு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்