LCU வில் இடம்பெற்றதா லியோ? பல நாள் காத்திருப்புக்கு கிடைத்த விடை!

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (09:36 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக இருந்த விஜய் நடித்துள்ள லியோ படம் சற்று முன்னர் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆனது. அண்டை மாநிலங்களில் காலை ஐந்து மணிக்கே காட்சிகள் திரையிடப்பட்டன. அதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று படத்தை பார்த்துள்ளனர்.

இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் டிவிட்டரில் தங்கள் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் பல நாளாக ரசிகர்கள் இந்த படம் எல் சி யு வில் வருமா வராதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளனர். படத்தின் இறுதியில் கமல்ஹாசன் (விக்ரம்) குரல் இடம்பெறும் வாய்ஸ் ஓவர் காட்சி இருக்கிறது என்றும் அதனால் இந்த படம் எல்சியு தான் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

லியோ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  லோகேஷ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய லலித் செவன் ஸ்கீர்ன் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்