இந்தொயாவின் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம்… யுத்த காண்டம் போஸ்டர் வெளியீடு!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (11:02 IST)
யுத்த காண்டம் என்ற படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழுவினர் அதை இந்தியாவின் முதல் சிங்கிள் ஷாட் படம் என அறிவித்துள்ளனர்.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை. பார்த்திபனின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஆனால் இப்போது யுத்தகாண்டம் என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி இதுதான் இந்தியாவின் முதல் சிங்கிள் ஷாட் படம் என்று விளம்பரப்படுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்