பிரமிக்க வைக்கும் "இந்தியன் 2" படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ !

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (14:13 IST)
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. கமல் இரண்டு ரோல்களில் நடிக்கும் இப்படத்தில் காஜல் அஃகர்வால் கதா நாயகியாக நடிக்கிறார். 
 
இவர்களுடன் விவேக், டெல்லி கணேஷ், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு  ரத்னவேலு ஒளிப்பதிவு  செய்து வருகிறார். 
 
கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் சென்னை EVP பிலிம் சிட்டியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அங்கிருந்து ஒரு சில ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சேனாதிபதி தாத்தாவை திரையில் பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்