பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இதுவரை தயாரிப்பாளர்களுக்கு தான் கண்டிசன் போட்டு பழக்கம். ஆனால் முதல் முறையாக ஷங்கருக்கு தயாரிப்பு நிறுவனமான லைக்கா ஒரு கண்டிஷன் போட்டுள்ளது. கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் கண்டிப்பாக முடித்து கொடுக்க வேண்டும் என லைக்கா நிறுவனம் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
ஏப்ரல் மாதத்திற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அதற்குள் எப்படி படப்பிடிப்பை முடிக்க முடியும் என்று ஷங்கர் திணறி வருகிறார். ஆனால் அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்திற்கு மேல் காலதாமதம் நீடித்தால் தன்னுடைய சம்பளம் கட் ஆகும் என்பதால் வேறு வழியின்றி கமலஹாசன் இல்லாத காட்சிகளை இயக்குனர் வசந்தபாலனை இயக்கச் சொல்லி அவர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் ஒரு பக்கம் இந்த படத்தை இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது