உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கமலஹாசன் கலந்து கொள்ள இருப்பதாகவும் கமலஹாசன் சம்பந்தப்பட்ட சண்டை காட்சி ஒன்று பிரம்மாண்டமாக தயாரிக்க செட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் ‘இந்தியன் 2’திரைப்படம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்த தகவலின்படி அதே நாளில் பிரமாண்ட இன்னொரு பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படமும் வெளியாக உள்ளதால் தற்போது ‘இந்தியன் 2’திரைப்படத்தின் ரிலீஸ் தேதி 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிஉள்ளது
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் அந்தத் தேர்தலில் கமலஹாசன் மற்றும் அவரது கட்சியினர் போட்டியிடவுள்ள நிலையில் ‘இந்தியன் 2’திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.