"இந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் சங்கர்" எங்கே விசிட் அடித்திருக்காரு பாருங்க!

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (12:18 IST)
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன்-2'


 
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. அதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளனர். இதற்கிடையில் சமீபத்தில் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் , ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தனர். 
 
இந்நிலையில் தற்போது படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான  லொகேஷனுக்காக இயக்குனர் சங்கரும் அவரது குழுவினரும் தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான படக்காட்சிகள் ஐதராபாத்தில் படம்பிடிக்க திட்டமிட்டுள்ள படக்குழுவினர் அங்குள்ள கடைவீதி ஒன்றை பார்வையிட்ட புகைப்படங்ககள் தற்போது இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்