இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்திஇல் அஜித்திற்கு ஜோடியாக முதன் முறையாக தமிழில் வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர்.
அண்மையில் வெளிவந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதையடுத்து இப்படத்தின் சிங்கிள் டிராக் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருந்த வேளையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள "அகலாதே" பாடல் நாளை 6 மணிக்கு வெளியாகும் என நேற்று ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்தார் போனி கபூர்.