நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் 'அஞ்சலி விக்கிரமாதித்யா'

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (19:53 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயனதாரா நடிப்பில் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கிய 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வசூலை பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகிறது. தெலுங்கு டப்பிங் உரிமையை பெற்ற பிரல டோலிவுட் தயாரிப்பாளர்கள் ராம்பாபு மற்றும் கோபிநாத் ஆகியோர் இந்த படத்தின் டப்பிங் பணியில் விறுவிறுப்பாக உள்ளனர்

இந்த நிலையில் இந்த படத்திற்கு தெலுங்கில் 'அஞ்சலி விக்கிரமாதித்யா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படம் ஒரு க்ரைம் த்ரில்லர் படம் என்பதும் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள அனுராக் காஷ்யப் நடிப்பில் பட்டைய கிளப்பியிருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்