இளையராஜா பயோபிக் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

vinoth

செவ்வாய், 4 ஜூன் 2024 (08:17 IST)
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியாவோடு தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்த படத்தின் திரைக்கதைக்காக இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இளையராஜாவோடு நெருக்கமாக பழகிய தமிழ் சினிமா நட்சத்திரங்களை சந்தித்து பேசி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த பணிகள் எல்லாம் முடிந்து படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சில நாட்கள் நடித்து விட்டு தனுஷ் தன்னுடைய பாலிவுட் படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்