தனுஷின் அடுத்த இந்தி பட ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

vinoth

சனி, 1 ஜூன் 2024 (06:45 IST)
தமிழ் மொழியில் தனது நடிப்பு திறமையால் கலக்கிய தனுஷ் 2013 ஆம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி அத்ராங்கி ரே படத்தில் இணைந்தது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக தனுஷ்- ஆனந்த் எல் ராய்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளது. ராஞ்சனா வெளியாகி 10 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் “தேரே இஷ்க் மேய்ன்” என்ற படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியிடப்பட்டாலும் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை.

இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் இந்த பட ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் மொத்த ஷூட்டிங்கும் வாரணாசியில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக தனுஷ் மொத்தமாக 60 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்