தமன்னா ஆணாக இருந்திருந்தால் திருமணம் செய்திருப்பேன்: பிரபல நடிகை ஓபன் டாக்

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (11:00 IST)
நடிகை தமன்னா ஆணாக இருந்திருந்தால் இந்நேரம் அவரை நான் திருமணம் செய்திருப்பேன்  என நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார். 
 

 
தமன்னாவும் சுருதிஹாசனும் நெருங்கிய தோழிகள் என்பது எல்லாருக்கும் தெரியும். இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசும் புகைப்படங்கள் இணையதளங்களில் அதிகமாக வந்திருக்கும். தனது தோழி தமன்னா பற்றி பேட்டி ஒன்றில் சுருதிஹாசன் குறிப்பிடுகையில்,  தமன்னாவின் நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள் என்றும், அவர் ஒரு நல்ல பெண் என்றும், அவர் மட்டும் ஆணாக இருந்திருந்தால் அவருடன் டேட்டிங் சென்றிருப்பேன், ஏன் அவரை திருமணம் கூட செய்திருப்பேன்' என்றும் கூறினார்.

 
நடிகை சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த நடிகர் மைக்லேல் கார்சல் என்பவரை காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்