வேலூர் அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள மலபார் கோல்டு நகை கடையை நடிகை தமன்னா திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஜினி கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு தனக்கு அரசியல் பற்றி சுத்தமாக எதுவும் தெரியாது என்றார்.
தொடர்ந்து திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய போது நீங்களே மாப்பிள்ளை இருந்தால் பார்த்து சொல்லுங்கள் என்றார். அப்போது அங்கு வந்த வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மைதிலி, நடிகை தமன்னாவிடம், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் இரண்டு நிமிடம் விழிப்புணர்வாக பேசும்படி கோரிக்கை வைத்தார்.
அதை ஏற்று பேசிய தமன்னா, வேலூர் நகரத்துக்கு வருகை தந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்களின் அன்பிற்கு என்ன வார்த்தை சொல்வது என்றே தெரியவில்லை. அனைவரும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்தபடியும், பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் கட்டாயம் அணிந்து கொள்ளுமாறு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் எனக்கு பிடித்த ரசிகர்கள் ஐ லவ் யூ என் பேச்சை கேட்பீர்கள் என நம்புகிறேன் என்றார்.