பாலாஜி மனைவியிடம் பேசிய சிம்பு - கணவருடன் இணைவாரா நித்யா?

செவ்வாய், 27 மார்ச் 2018 (10:49 IST)
நடிகர் தாடி பாலாஜியை விட்டு பிரிந்திருக்கும் அவரது மனைவி நித்யாவிடம், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழுமாறு நடிகர் சிம்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

 
நடிகர் தாடி பாலாஜி ஏற்கனவே திருமணமானவர் என்பதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டார் எனவும், தன்னை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் புகார் கூறி அவரை விட்டு பிரிந்து சென்ற அவரின் மனைவி நித்யா தனது பெண் குழந்தையுடன் தற்போது அவரின் தாய் வீட்டில் தங்கியிருக்கிறார். இருவரும் இணைய பலர் முயற்சி எடுத்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. 

 
பல மாதங்களாக நடந்து வரும் இந்த பிரச்சனையில் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், நடிகர் சிம்பு இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளார். தொலைப்பேசியில் நிதியாவிடம் நெடுநேரம் பேசிய சிம்பு  ‘எனக்காக பாலாஜியிடம் சேர்ந்து வாழுங்கள். அதன் பின்பும் அவர் மீது தவறு இருந்தால் உங்களுக்கு ஆதரவாக நான் நிற்பேன்’ எனப் பேசினாராம். 
 
ஆனாலும், நித்யா இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்