’’நான் தேவதூதன் அல்ல...’’ சூப்பர் ஸ்டாரிடம் புத்தகம் கொடுத்த சோனு சூட்

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (17:45 IST)
ஏழைகளுக்கு உதவுகின்ற தனது உதவிமனப்பான்மையால் இந்தியாவின் அடையாளமாக மாறிப் போய், ரியல் ஹீரோவாக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் சோனு சூட் தான் சந்தித்த கொரோனா கால  ஊரடங்கு அனுபவங்களை மையமாக வைத்து ’’நான் தேவதூதன் இல்லை ’’( Iam not Messiah) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.  இப்புத்தகத்தின் பிரதியை தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியிடம் கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கொரோனா காலப் பொது ஊரடகத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கும் உதவி செய்த நடிகர் சோனு சூட்டின் இரக்க குணம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

அத்துடன் படிக்க முடியாத சிறுமிகள்,ஏழை விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள் எனப் பலருக்கும் அவர் உதவி செய்து ரியல் ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அவரது சேவைக்காக ஐநா சபை விருதுகள் கொடுத்து கௌரவித்தது. சமீபத்தில் அவருக்கு சிலை வைத்து கொல்கத்தாவில் வணங்கினர்.இந்நிலையில் ஒவ்வொருத்தர் வீட்டிலும் சோனு சூட்டின் புகைப்படம் வைக்கப்பட்டு அவரை கடவுளாகவே வணங்கி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் அவரது படத்திற்கு பூஜை செய்து தேங்காய் உடைப்பது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

சமீபத்தில் அவர் மக்களுக்கு உதவுவதற்காக தனது சொத்துகளை அடமானம வைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து கவலைப்படாத நடிகர் சோனு சூட், தன்னால் முடிந்தவரை உயிர் மூச்சு உள்ளவரை
மக்களுக்கு உதவுவதாக உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், திரையில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் மக்களுக்கு ஹீரோவாகவும் கடவுளாகவும் தெரியும் நடிகர் சோனு சூட், இனிமேல் தான் வில்லனாக நடிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சினிமாவில் நல்ல கேரக்டரில் மட்டுமே நடிக்கவுள்ளாகத் தெரிவித்துள்ள அவருக்கு பல பட வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ரியல் ஹீரோவாக மக்கள் மனதில் இடம்பிடித்து, கோயில் கட்டிக் கும்பிடப்பட்டு வரும் நடிகர் சோனு சூட் தான் சந்தித்த கொரோனா கால  ஊரடங்கு அனுபவங்களை மையமாக வைத்து ’’நான் தேவதூதன் இல்லை ’’( Iam not Messiah) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.  இப்புத்தகத்தின் பிரதியை தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியிடம் கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்