’’விரைவில் குணமடையுங்கள் அன்புடன் தேவா …!!’’சூப்பர் ஸ்டார் டுவீட் ...ரஜினி ரசிகர்கள் நெகிழ்ச்சி
சனி, 26 டிசம்பர் 2020 (20:22 IST)
விரைவில் குணமடையுங்கள் சூர்யா என தளபதி படத்தை நினைவு கூர்ந்து சூப்பர் ஸ்டார் மம்முட்டி டுவீட் பதிவிட்டுள்ளார்.
உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள அப்பொல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார் எனத் தகவல்கள் வெளியான நிலையில் ரஜினியின் டிஸ்சார்ஜ் குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வந்த அண்ணாத்தா சூட்டிங்கில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, ரஜினி தனிமைப்படுத்திக்கொண்டார்.
அவருக்கு திடீரென்று ரத்த அழுத்தம் ஏற்பட்டதை அடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்பொல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார் எனத் தகவல்கள் வெளியானது.