’வாய்தவறி பேசிவிட்டேன்’ - மீரா மிதுன் அந்தர்பல்டி

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (16:47 IST)
வாய்தவறி பட்டியலின சமுதாயத்தைப் பற்றி அவதூறாகப் பேசியதாக முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளார் மீராமிதுன்.

பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மீரா மிதுனை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்

இந்நிலையில் நேற்று மீரா மிதுன் தனக்கு ஜாமீன் வேண்டுமென்று சென்னை  முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில்,  தன்னை நம்பி அதிக தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்றும் தான் வாய்தவறி தெரியாமல் பட்டியலினத்தவர் குறித்து பேசி விட்டதாகவும் கூறி மீரா மிதுன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

மேலும், என்னைக் குறித்து அவதுறு செய்திகள் பரப்பியதால் ஏனக்கு  உளைச்சல் ஏற்பட்டது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக நான் பேசியபோது, வாய் தவறி பட்டியலின சமுதாயத்தைப் பற்றி பேசியதாக அதில் தெரிவித்ட்துள்ளார்.

இந்நிலையில், மீராமிதுன் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்தவறிப் பேசியதாக அந்தர்பல்டி அடித்துள்ளார் என இதுகுறித்த மீம்ஸ்கள் இணையத்தில் டிரெண்ட்டிங் ஆகி வருகிறது.

இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு,  ஏற்கனவே அவர் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்