தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரொனா பாதிப்பு

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (16:20 IST)
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும்  உருமாறிய டெல்டா வகை வைரஸ் அவர்களைப் பாதிக்கும் என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில், அமெரிக்கா, பிரேசில் நாடுகளை அடுத்த இந்தியா அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா முதல் அலை முடிந்து தற்போது 2 வது அலை பரவிவருகிறது. விரைவில் 3 வது அலை பரவும் அபாயமுள்ளது என அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகின்றது. முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் குறிப்பிட நாட்கள் கழித்து  2 வது டோஸ் போட்டுக்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டாலும்  உருமாறிய டெல்டா வகை வைரஸ் அவர்களைப் பாதிக்கும் என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை, இந்தியாவில் தடுப்பூசி போட்டவர்களின் சுமார் 4000 பேருக்கு கொ மீண்டும் கொரொனா தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தக்க் கூறப்படுகிறது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்