சூர்யாவைப் பார்க்கும் போது அழுதேன் - வைகைப் புயல் வடிவேலு

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (16:51 IST)
தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது‌ என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அமெசான் வீடியோ பிரைமில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை பற்றி பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நல்ல விமர்சனங்கள் அளித்து வருகின்றனர்.

இப்படத்தைக் குறித்து, இப்படம் உருவாகக்  காரணமான கேப்டன் கோபிநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

சூரரைப் போற்று அற்புதமான உள்ளது, ஒரு ரியல் ரோலர் கோஸ்டர் படம்.நான் கடந்த இரவு தான் படத்தைப் பார்த்தேன். என்னால் சிரிப்பையும் அழுகையும் அடக்கமுடியவில்லை. குடும்பக் காட்சிகள் என்னை கடந்த கால நினைவுகளுக்கு கொண்டு சென்றது எனத் தெரிவித்தார்.

பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது‌ “ எனத் தெரிவித்துள்ளார்

அதேபோல் நடிகர் வடிவேலு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது‌. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் எனத் தெரிவித்துள்ளார்.  @Suriya_offl #SooraraiPottr

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்