டிசம்பர் மாத இறுதிக்குள் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்… சகோதரர் பேட்டி!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (16:47 IST)
நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாத இறுதிக்குள் கட்சி ஆரம்பிப்பார் என அவரின் மூத்த சகோதரர் சத்ய நாராயணா தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக வைரலாகி வரும் அவர் பெயரில் வெளியான கடிதமும் நேற்று அவர் பதிவு செய்த டுவிட்டும் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் ரஜினியின் உடல்நிலையை முன்னிலைப் படுத்தி தற்போதைக்கு அரசியலுக்கு வருவது தனது உடல்நிலைக்கு நல்லதில்லை என்பது போல சொல்லப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கமாட்டார் என சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரரான சத்ய நாராயணா ‘ரஜினிகாந்த் நீண்ட ஆரோக்கியத்துடன் இருந்து மக்கள் பணியாற்றுவார்.  இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் அரசியலுக்கு வருவார். அவர் உடல்நிலை குறித்து அடிக்கடி தொலைபேசி மூலம் விசாரித்து வருகிறேன். நல்ல முடிவு தெரியும்.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்