சமந்தா தொடர்ந்த அவதூறு வழக்கு - கடுப்பான நீதிபதி அறிவுரை!

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (12:42 IST)
சமந்தா யூடியூப் சேனல்கள் மீது அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் சமந்தாவின் வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு அறிவுரை. 

 
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கடந்த 2017ல் திருமணமான நிலையில் சமீபத்தில் அவர்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விவாகரத்துக்கு பலரும் பல காரணங்களை பேசி வந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்தா கேட்டுக்கொண்டார். 
 
இருப்பினும் சமந்தாவின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளங்களிலும், சில யூடியூப் சேனல்களிலும் விவாதிக்கப்பட்டன. இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறாக செய்திகளைப் பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்தார். 
 
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் சமந்தாவின் வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்கு தொடர்வதை விட, அவர்களை நடிகை சமந்தா மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம். பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை பொது களத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்கிறார்கள் என்று வருத்தம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்