ஹிப் ஹாப் ஆதிக்கு ஒரு கானா - பாடல் பாடி படவாய்ப்பு பெற்ற தீவிர ரசிகன்!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (14:00 IST)
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக மாறி இருப்பவர் ஹிப் பாப் ஆதி. கடந்த 2017ம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரமெடுத்த ஆதி தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
பாடல், இசை, ஆல்பம், நடிப்பு என திரைத்துறை பிசியாக வலம் வந்துகொண்டிருக்கும் ஆதி மிகவும் எளிமையான செலிபிரிட்டியாக ரசிகர்களை கவர்பவர். இந்நிலையில் ஆதியின் தீவிர ரசிகர்கள் அவரை சந்திக்க சொந்த ஊருக்கே சென்று அவரை சந்தித்து அவருக்காக பிரத்யேமாக எழுதிய கானா பாடலை பாடி அவரை மகிழ்வித்தனர். அந்த பாடலை பாடி முடிப்பதற்குள் ஆதி என் படத்தில் பாட்டு பாடுறியா? என கேட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சென்னை ராயபுரத்தை சேர்ந்த இந்த இளைஞர்கள் கானா பாடல் படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்