காலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்

Webdunia
சனி, 26 மே 2018 (16:13 IST)
காலா படத்தின் ஹிரோயின் ஹூமா குரேஷி நடிகர் ரஜினியின் புதிய கெட்டப் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 
 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருன் ஜுன் 7ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
 
இந்நிலையில், இப்படத்தின் ரஜினியின் காதலியாக நடித்துள்ள ஹூமா குரேஷி. படத்தில் ரஜினியுடன் சேர்ந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
அதில்” இனி மேலும் காலா படத்தின் இந்தப் புகைப்படத்தை வெளியிட காத்திருக்க முடியாது “என தெரிவித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஈஸ்வரி ராவ் மனைவியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்