என்னுடைய முதல் விருதை ரூ.25 லட்சத்திற்கு ஏலத்தில் விற்றதாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் விஜய தேவரகொண்டா. இவர், அர்ஜூன் ரெட்டி என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.
தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அவர், தமிழில் நோட்டா படத்திலும் நடித்திருந்தார்.
இதையடுத்து, சமந்தாவுடன் இணைந்து நடித்த குஷி படமும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது.
இந்த நிலையில், கீதா கோவிந்தம், சர்க்காரு வாரி பட்டா ஆகிய படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில், விஜய்தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் பேமிலி ஸ்டார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார்.இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார்.
இப்பவரும் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி கவனம் பெற்றது.
சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த விஜய தேவரகொண்டா, சிறந்த நடிகருக்காக நான் வாங்கிய முதல் விருதை ரூ.25 லட்சத்திற்கு ஏலம் விட்டதாக கூறியிருந்தார். மேலும், அந்த விருதை ஏலம் விட்டதில் கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.