'அஜித் 61' படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.
இந்நிலையில், 'அஜித்குமாரின் 61' பட ஷூட்டிங் வரும் 18 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்நிலையில் அஜித்-61 படத்திற்கு நடிகர் அஜித்குமார் முற்றிலும் ஃபிட் ஆன விளையாட்டு வீரரைப் போன்ற உடலுடன் நடிக்கவுள்ளதாகவும், இதற்காக சிறந்த டிரெயினரிடம் அஜித்குமார் பயிற்சி எடுத்து வருவதாக தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது.