நகைக்கடன் தள்ளுபடிக்கு வட்டி செலுத்தும்படி கூறினால் நடவடிக்கை - அமைச்சர் பெரியசாமி

புதன், 2 மார்ச் 2022 (16:32 IST)
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் அடகு வைக்கப்பட்டு நகை கடன் வாங்கியவர்களுக்கு   நகைகள் திருப்பி அளிக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் தெரிவித்த   நிலையில் வட்டி செலுத்த கூறும் அதிகாரிகள் மீது  நடவடிக்கை பாயும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் வாங்கிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார் என்பது இதுகுறித்து அரசு ஆணையும் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால்   நகர்ப்புறங்களில்  உள்ள கூட்டுறவு வங்கிகளில் பயனாளிகள்  இன்று முதல் நகைகளை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இ ந் நிலையில், கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடிக்கு  தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்