HBD யோகிபாபு....இணையதளத்தில் டிரெண்டிங்

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (00:03 IST)
இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் நடித்தவர் பாபு. இதன் பின்னர் யோகி பாபு என அழைப்படுகிறார். இவர், அரண்மனை, பெரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகான  யோகிபாபு, நடிகர் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் விஜய்65 உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன், சந்தானம் நடித்த தில்லுக்குத் துட்டு உள்ளிட்ட பல படங்களில் எடிட்டராக பணியாற்றியவர் கோபிகிருஷ்ணா.

இவரது தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் ராயே பேயே. இப்படத்தை சக்திவாசன் இயக்கிவருகிறார்.

ஐஸ்வர்யா மற்றும் ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் யோகிபாபு நடித்து வருகிறார். இவர் இன்று தனது 36 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு ரசிகர்கள் அவரது பிறந்தநாளை இணையதளத்தில் ட்ரெண்டிங் செய்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்