ஹரி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர்...?

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2016 (18:46 IST)
எஸ் 3 படத்தை முடித்த பின் விக்ரம் நடிப்பில் சாமி இரண்டாம் பாகத்தை ஹரி இயக்குகிறார். அதன் பிறகு அவர் யாரை இயக்கப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

 

 
தமிழ் நடிகர்களின் படங்கள் ஆந்திரா, தெலுங்கானாவில் சக்கைப்போடு போடுவது போல் தெலுங்கு நடிகர்களின் படங்கள் தமிழில் வரவேற்பு பெறுவதில்லை. தமிழிலும் கொடி நாட்ட வேண்டும் என்ற தெலுங்கு நடிகர்களின் ஆசை அவர்களை தமிழ்ப் படம் நோக்கி இழுக்கிறது.
 
முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு. அதேபோல் தானும் தமிழில் அறிமுகமாக நினைக்கிறார் ஜுனியர் என்டிஆர். அதற்கு அவர் தேர்வு செய்திருப்பது இயக்குனர் ஹரியை என்கிறார்கள்.
 
விரைவில் அதிரடியான அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியமில்லை.
அடுத்த கட்டுரையில்